துடுப்பாட்ட செய்தி
7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி: மும்பை அணிக்கு முதல் அடி
[ சனிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2013, 08:31.07 பி.ப GMT ]
சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் போட்டியில் சூதாட்ட சர்ச்சையை கடந்து அசத்திய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் நடக்கிறது. ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஏ பிரிவு லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணித்தலைவர் டிராவிட் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்கள் எடுத்தது.

சச்சின் 15 ஓட்டங்களும், அணித்தலைவர் ரோகித் சர்மா 44 ஓட்டங்களும், பொல்லார்டு 42 ஓட்டங்களும் எடுத்தனர். ராஜஸ்தான் சார்பில் விக்ரம்ஜீத் மாலிக் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 143 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரகானே 33 ஓட்டங்களும், சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்து 54 ஓட்டங்களும், வாட்சன், ஸ்டூவர்ட் பின்னி தலா 27 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருதை ராஜஸ்தான் அணியின் விக்ரம் ஜீத் மாலிக் வென்றார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
தொடர்ந்தும் முன்னிலையில் சீனா - ஒன்பதாவது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
முறையற்ற பந்துவீச்சு - சர்ச்சையில் சிக்கிய சுனில் நாரின்
தலைதப்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்? லாகூர் லயன்ஸ் திட்டம் என்ன?
குப்பை தொட்டியை தாக்கிய மேக்ஸ்வெல்: டிவிட்டரில் கலகல பேச்சு
தடைகளை தகர்க்கும் சங்கக்காரா: சொல்கிறார் அட்டப்பட்டு
சயீத் அஜ்மலை தொடர்ந்து சிக்கிய முகமது ஹபீஸ்
உலகக்கிண்ணத்தில் அதிரடி: இலங்கைக்கு குறி வைக்கும் இங்கிலாந்து
புதிய மைல்கல்லை எட்டிய மெஸ்ஸி
கோப்ராஸை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி
சதம் விளாசினால் மட்டை பரிசு: வோராவுக்கு ஆஃபர் போட்ட ஷேவாக்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: நிரோஷா உதயகுமாரன்
பிறந்த இடம்: கனடா Mississauga
வாழ்ந்த இடம்: கனடா Mississauga
பிரசுரித்த திகதி: 24 செப்ரெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வரலாறு சாதனை படைத்தது இந்தியா
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 05:56.56 மு.ப ] []
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் ஸ்குவாஷ் அணி தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. [மேலும்]
ஜடேஜா அதிரடியில் சென்னை அசத்தல் வெற்றி
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 06:33.07 பி.ப ] []
பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிக்கெதிரான இன்றைய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. [மேலும்]
கழற்றிவிடப்பட்ட யூனிஸ்கான்: கவலையில் கூறும் வார்த்தைகள்
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 08:30.25 மு.ப ] []
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து யூனிஸ்கான் கருத்து தெரிவித்துள்ளார். [மேலும்]
பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய இந்தியா
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 07:38.46 மு.ப ] []
கடந்த வாரம் உலகில் நடைபெற்ற சம்பவங்களின் புகைப்படங்கள் இதோ, [மேலும்]
பந்தை பிடிக்க திணறும் இந்திய வீரர்கள்: ஜான்டி ரோட்ஸ்
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 06:40.06 மு.ப ] []
கிரிக்கெட் ஆட்டத்தின் போது இந்திய அணி வீரர்கள் கீழே விழுந்து பந்தை தடுக்க யோசிக்கிறார்கள் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிறந்த ஃபீல்டருமான ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். [மேலும்]