துடுப்பாட்ட செய்தி
7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 01:15.47 பி.ப GMT ]
இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் கோஹ்லியின் அரைசதம் கைகொடுக்க இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா சென்றுள்ள இங்கிலாந்து அணி ஐந்து ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.

மூன்றாவது போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று நடக்கிறது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்சிற்குப் பதில் பிரஸ்னன் இடம் பெற்றார்.

இங்கிலாந்து அணிக்கு குக், பெல் இணைந்து நிதான துவக்கம் தந்தனர். பின் குக், பீட்டர்சன் தலா 17 ஓட்டங்களில் திரும்பினர். பெல் 25 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்பு களமிறங்கிய கீஸ்வெட்டர், சமித் படேல், டென்பாக் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தனர். ரூட் 39 ஓட்டங்களும், பிரஸ்னன் 25 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அணி 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் ஜடேஜா 3 விக்கெட்டும், அஷ்வின், இஷாந்த் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 28.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கம்பீர் 33 ஓட்டங்களும், யுவராஜ் சிங் 30 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டமிழக்காமல் கோஹ்லி அரைசதம் கடந்து 77 ஓட்டங்களும், டோனி 10 ஓட்டங்களும் எடுத்தனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐ.பி.எல்.தொடர் தான் எனக்கு கடைசி தொடர்: டிராவிட் சூசகப் பதில்..!
ஐ.பி.எல். சூதாட்டத் தொடர்பில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் நடுவர் நீக்கம்
பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனிடம் பொலிஸ் விசாரணை
ட்விட்டரால் வார்னருக்கு ரூ. 3.15 லட்சம் அபராதம்
தங்க சப்பாத்து விருதை வென்றார் வான் பெர்சி
தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம்
ஐ.பி.எல் சூதாட்டம்: ஸ்ரீசாந்த் தோழியான நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி
வீரர்களின் செயல் ஏமாற்றத்தை அளித்தது: டிராவிட்
சென்னை சொதப்பிய போட்டியில் சூதாட்டமா?
சொந்தமாக சூதாட்ட கம்பெனி தொடங்கிய ஸ்ரீசாந்த்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஸ்ரீசாந்த்தால் 7 நிமிடத்தில் ரூ. 2.5 கோடி சம்பாதித்த சூதாட்ட தரகர்
[ புதன்கிழமை, 22 மே 2013, 12:24.42 பி.ப ]
மொகாலியில் கடந்த 9ம் திகதி நடைபெற்ற ஐ.பி.எல் பந்தயத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்ட தரகர்களுக்காக ஒரு ஓவர் பந்து வீசினார். [மேலும்]
நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்த்
[ புதன்கிழமை, 22 மே 2013, 11:06.38 மு.ப ]
நான் அப்பாவி, நான் ஒரு தவறும் அறியாதவன், நான் எந்த விதமான சூதாட்ட விடயத்திலும் ஈடுபட்டவனில்லை என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். [மேலும்]
சுமித் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தியது தான் திருப்புமுனை: பிளமிங்
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:40.46 மு.ப ]
ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையை வீழ்த்தி தொடர்ந்து 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. [மேலும்]
ஸ்பாட்பிக்சிங்கில் சென்னை அணிக்கு தொடர்பு?
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:16.51 மு.ப ] []
ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் தாராசிங்கின் மகன் வின்டூ ரந்தவா சென்னை அணி உரிமையாளரின் உறவினரை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. [மேலும்]
மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் பணிநீக்கம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:14.04 மு.ப ]
கேரளாவில் மத்திய அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் இரும்பணம் என்ற ஊரில் மார்க்கெட்டிங் டிவிசன் உதவி மேலாளராக இருந்து வந்தவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். [மேலும்]