துடுப்பாட்ட செய்தி
சிட்னி ஒருநாள் போட்டிக்கு ஜெயவர்த்தன கடும் எதிர்ப்பு
[ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 11:56.05 மு.ப GMT ]
சிட்னி ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இதற்கு இலங்கை அணித்தலைவர் ஜெயவர்த்தன கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியின் முடிவில், இலங்கை 2-1 என்று முன்னிலை வகித்தது. நான்காவது போட்டி சிட்னியில் நேற்று நடந்தது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

இலங்கை வேகத்தில் அவுஸ்திரேலிய அணி மீண்டும் ஆட்டம் கண்டது. அவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 222 ஓட்டங்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இலங்கை அணியின் அணித்தலைவர் ஜெயவர்த்தன 4 ஓட்டங்களும், டில்ஷன் 9 ஓட்டங்களும் எடுத்து நல்ல தொடக்கம் அளித்தது.

இலங்கை அணி 3.2 ஓவரில் 14 ஓட்டங்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்பு போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இலங்கையின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

ஐ.சி.சி., விளக்கம் தருமா:

இதனால் ஆத்திரம் அடைந்த அணித்தலைவர் ஜெயவர்த்தன கூறுகையில், கடந்த நவம்பரில் பல்லேகலேவில் நடந்த நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் போட்டியின் போதும் மழை குறுக்கிட்டது.

மிக மோசமான நிலையில் தொடர்ந்து விளையாடினோம். அப்போது களநடுவர் இருந்த ஆன்டி பைகிராப்ட், விளையாடுவதற்கு ஆபத்தான சூழ்நிலை இருந்தால் மட்டுமே போட்டி நிறுத்தப்படும் என்றார்.

ஆனால், சிட்னி போட்டிக்கு களநடுவர் இருந்த ஸ்ரீநாத், விளையாடுவதற்கு உகந்த சூழ்நிலை இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்படுகிறது என்றார்.

இரு இடங்களிலும் வெவ்வேறான விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து தொடருக்கும் ஒரே மாதிரியான நிலையை கையாள வேண்டும் என்றும் இது குறித்து ஐ.சி.சி. களநடுவர் ஸ்ரீநாத்திடம் விளக்கம் கேட்டு முறைப்படி கடிதம் அனுப்பப்படும் எனவும் கூறியுள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ரஸல் அதிரடியில் கொல்கத்தா அபார வெற்றி (வீடியோ இணைப்பு)
டூம்னியின் அதிரடியில் சன்ரைசர்ஸை வீழ்த்திய டேர்டெவில்ஸ் (வீடியோ இணைப்பு)
ஹோல்டர் சதம்: இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் போட்டி டிரா
பந்துவீச்சாளர்களை புகழும் டோனி
வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுமா ஐதராபாத்? டெல்லியுடன் இன்று மோதல்
43 வயதிலும் அசத்தும் பிரவீன்!
ஐபிஎல் ஏலத்தின் போது தூங்கிக் கொண்டிருந்தேன்: யுவராஜ் சிங்
16 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியை ருசி பார்த்த வங்கதேசம்
அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ஜேம்ஸ் அன்டர்சன் சாதனை
ஸ்மித், ரெய்னா அதிரடியில் சூப்பர்கிங்ஸ் அபார வெற்றி: மீண்டும் வீழ்ந்த மும்பை (வீடியோ இணைப்பு)
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: அந்தோனிப்பிள்ளை செல்லையா ஜோக்கிம்
பிறந்த இடம்: யாழ். அல்லைப்பிட்டி
வாழ்ந்த இடம்: வவுனியா
பிரசுரித்த திகதி: 17 ஏப்ரல் 2015
மரண அறிவித்தல்
பெயர்: செல்வநாயகம் நவம்
பிறந்த இடம்: யாழ். மாதகல்
வாழ்ந்த இடம்: யாழ். குருநகர், நோர்வே Oslo
பிரசுரித்த திகதி: 14 ஏப்ரல் 2015
20ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தம்பு திருஞானசம்பந்தர்
பிறந்த இடம்: யாழ். ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம்: முல்லைத்தீவு விசுவமடு
பிரசுரித்த திகதி: 13 ஏப்ரல் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இடம்: பெற்றோர் உருவத்தை பச்சை குத்திய வீரர்
[ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 06:28.01 மு.ப ] []
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இளம் வீரரான சூர்ய குமார் யாதவ் விளையாடி வருகிறார்.  [மேலும்]
விரைவில் குட்டிமாலிக்.. உற்சாகத்தில் சானியாவின் கணவர்
[ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 05:01.36 மு.ப ] []
சானியா மிர்சாவின் கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் `விரைவில் குட்டிமாலிக்’ வரப் போவதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். [மேலும்]
ஐ.பி.எல் 8: ரஹானே அதிரடியில் ராஜஸ்தான் அபார வெற்றி (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015, 04:59.22 பி.ப ] []
ஐதராபாத் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [மேலும்]
ராஜமரியாதையுடன் மும்பைக்கு பறந்த டோனியின் குழந்தை
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015, 11:29.09 மு.ப ] []
சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி தனது மனைவி மற்றும் குழந்தை ஜிவா உடன் சென்னை விமான நிலையம் வந்திருந்தார். [மேலும்]
டுமினியை சூப்பராக ஆட்டமிழக்க செய்த அக்சர் படேல் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015, 08:06.01 மு.ப ] []
ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணித்தலைவர் டுமினியை பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் ஆட்டமிழக்க செய்த முறை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. [மேலும்]