துடுப்பாட்ட செய்தி
சன்ரைசர்ஸை சமாளிக்குமா பஞ்சாப்?
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 06:03.34 மு.ப GMT ]
ஐ.பி.எல்., தொடரில் இன்று ஐதராபாத், பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. வலிமையான பந்து கை கொண்டுள்ள சங்கக்காராவின் ஐதராபாத் அணியை, கில்கிறிஸ்டின் பஞ்சாப் அணி சமாளிக்குமா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல்., தொடரின் இன்றைய 25வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் அணி இத்தொடரில் பங்கேற்ற 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிராக மட்டும் தோற்றது.

இந்த அணியின் பலமே பந்துவீச்சு தான். வேகப்புயல் ஸ்டைன், இஷாந்த் சர்மா, திசரா பெரேரா ஆகியோருடன் மூன்று முறை "ஹாட்ரிக்" விக்கெட் கைப்பற்றிய சுழல் வீரர் அமித் மிஸ்ராவும் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இதனால் தான் புனே அணிக்கெதிராக 120 ஓட்டங்கள் எடுத்தும் போட்டியில் வெற்றி பெற முடிந்தது.

ஆனால், துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் சங்கக்காரா, காமிரான் ஒயிட் ஆகியோரைத் தான் பெரிதும் நம்பியுள்ளது. ஷிகர் தவான் காயத்தால் அவதிப்படுவதால் சிக்கல் நீடிக்கிறது.

இதனால், பார்த்திவ் படேல், ரவி தேஜா, ஆஷிஸ் ரெட்டி ஆகியோர் ஓட்டங்கள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

தவிர, துடுப்பாட்டத்தை வலுப்படுத்த மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரர் டேரன் சமிக்கு அணியில் இடம் கொடுத்துப் பார்க்கலாம்.

பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் தலா 2 வெற்றி, தோல்வியடைந்தது. கடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணிக்கெதிராக, தோல்வியின் விளிம்பு வரை சென்று மீண்டதால் இன்று ஐதராபாத்தை நம்பிக்கையுடன் சந்திக்கலாம்.

அணித்தலைவர் கில்கிறிஸ்ட் இன்று "பார்முக்கு" திரும்பினால் நல்லது. நடுவரிசையில் மன்தீப் சிங், வோரா, மில்லர் ஆகியோர் ஓட்டங்கள் சேர்ப்பது ஆறுதலான விடயம்.

டேவிட் ஹசி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். கடந்த போட்டியில் வாய்ப்பு பெற்ற மன்பிரீத் கோனியின் "சூப்பர்" ஆட்டம் இன்றும் தொடரும் பட்சத்தில் மீண்டும் ஒரு வெற்றி பெறலாம்.

பந்துவீச்சில் அனுபவ பிரவீண் குமார், அசார் மகமூது மட்டும் ஆறுதல் தருகின்றனர். அவானா கடைசி நேரத்தில் ஓட்டங்களை வாரி வழங்குகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் பியுஸ் சாவ்லா, 4 போட்டியில் 2 விக்கெட் மட்டும் வீழ்த்தி "பியூஸ்" ஆகியுள்ளார்.

ஐ.பி.எல்., அரங்கில் பஞ்சாப், ஐதராபாத் அணிகள் முதன்முறையாக மோதுகின்றன. முன்னதாக இருந்த டெக்கான் அணிக்கெதிராக 10 போட்டிகளில் பங்கேற்றுள்ள பஞ்சாப் அணி, 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சமிந்தா எரங்கா காயம்: டெஸ்ட் தொடரில் இருந்து விலகல்
அய்யோ..ஷேவாக்கிற்கு பந்து வீசவே முடியாது: சொல்கிறார் நரைன்
நீ உயரமா இருக்க…டோனியின் அட்வைஸ்: விக்கெட் விழுந்த இரகசியம்
திருமணமா? 2018 உலகக்கிண்ணம் தான் இலக்கு: நெய்மர்
வரலாற்றில் லண்டன் லார்ட்ஸ் டெஸ்ட்: என்ன நடந்தது தெரியுமா?
28 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை வெற்றி: குஷியில் டோனி
இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கால்பந்து அரங்கிலிருந்து வெளியேறும் இங்கிலாந்து அணித்தலைவர்
விஸ்வரூபம் எடுத்த இஷாந்த் ஷர்மா: 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
அம்மா எங்கப்பா..: ஏக்கத்தில் ரொனால்டோவின் மகன்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
6ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சின்னத்துரை லலிஸ் லாலினி
பிறந்த இடம்: யாழ். அரியாலை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 22 யூலை 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: நந்தகுமார் கதிர்செல்வன்
பிறந்த இடம்: கிளிநொச்சி
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 17 யூலை 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: கணேசமூர்த்தி முத்தையா
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: டென்மார்க் Arhus
பிரசுரித்த திகதி: 17 யூலை 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
என்னது உலகக்கிண்ணத்தை உடைச்சுட்டிங்களா?
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 07:48.54 மு.ப ] []
உலகக்கிண்ணம் வென்ற ஜேர்மனி உலகக்கிண்ண கொண்டாட்டங்களின் போது உலகக்கிண்ணத்தை உடைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
காதலியை கரம்பிடித்தார் சுவாரஸிடம் கடி வாங்கிய இத்தாலி வீரர் செலினி
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 06:12.01 மு.ப ] []
உருகுவே வீரர் சுவாரஸிடன் கடி வாங்கிய இத்தாலி வீரர் செலினி தனது காதலி கரோலினா போனிஸ்டாலியை மணந்தார். [மேலும்]
பரிதாப நிலையில் இங்கிலாந்து: வரலாறு படைக்குமா இந்தியா?
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 05:43.51 மு.ப ] []
இந்தியா 2வது இன்னிங்ஸில் 342 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்துக்கு 319 ஓட்டங்கள் இலக்காக வைத்துள்ளது. [மேலும்]
பிரேசில் அணியின் புதிய பயிற்சியாளராக துங்கா
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 04:22.55 மு.ப ] []
பிரேசில் அணியின் புதிய பயிற்சியாளராக  முன்னாள் அணித்தலைவர் துங்கா தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
நெதர்லாந்தில் நடைபெற்ற தேசிய நாள்- 2014ம் ஆண்டுக்கான வன்பந்து துடுப்பாட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 12:52.08 பி.ப ] []
நெதர்லாந்தில் தேசிய நாள்- 2014ம் ஆண்டுக்கான வன்பந்து துடுப்பெடுத்தாட்டம் நேற்று கோவ்டொரப் மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. [மேலும்]