துடுப்பாட்ட செய்தி
நியூசிலாந்து தொடர்: சிக்கலில் இந்திய அணி
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 03:27.28 மு.ப GMT ]
நியூசிலாந்து தொடரில் பங்கேற்க, இந்திய அணி அங்கு செல்லுமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.,) எதிர்கால அட்டவணைப்படி, இந்திய அணி, வரும் 2014 பெப்ரவரி மாதம்முதல் மார்ச் மாதம் வரை நியூசிலாந்து சென்று, மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் பங்கேற்க வேண்டும்.

இதனிடையே, 2014, பெப்ரவரி 24 முதல் மார்ச் 8 வரை, வங்கதேசத்தில் ஆசிய கிண்ணத்தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி பங்கேற்கிறது. இதனால், நியூசிலாந்து தொடரில் போட்டிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,) தெரிவித்தது.

இதன்படி, தலா இரண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகள் போதும் என்று இந்தியா தெரிவித்தது. இதுகுறித்து இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை.

இருப்பினும், இந்திய அணியின் நியூசிலாந்து பயணம் அதிகமான வருமானத்தை பெற்றுத்தரும் என்பதால், பி.சி.சி.ஐ., முடிவுக்காக, அவர்கள் காத்திருப்பதாக தெரிகிறது.

இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைமை அதிகாரி டேவிட் ஒயிட் கூறுகையில், இந்தியா தொடர் குறித்து பி.சி.சி.ஐ.,யுடன் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது உண்மை தான். அடுத்த சில வாரங்களில் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியாகும் என்று நம்புகிறோம் என்றார்.

இதனிடையே, கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன் முறையாக மேற்கிந்திய தீவுகள் அணி, நியூசிலாந்து செல்லவுள்ளது.

இங்கு, மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகள் (டிசம்பர் 3 முதல் ஜனவரி 15, 2014) கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
காதலிக்காக அடி வாங்கிய ரஹானே: ருசிகர தகவல்
தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு: சென்னை, ராஜஸ்தானுக்கு பதில் 2 புதிய அணிகள்?
டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்றது ஏன்? ரவி சாஸ்திரி விளக்கம்
கடற்கரை மணலில் தொடங்கிய மலிங்காவின் கிரிக்கெட் பயணம்- சிறப்பு பகிர்வு (வீடியோ இணைப்பு)
கோஹ்லியை வீழ்த்த கிடைத்த வாய்ப்பை கோட்டைவிட்ட குஷால் பெரேரா (வீடியோ இணைப்பு)
உசைன் போல்டை மண்ணை கவ்வ வைத்த கமெராமேன் (வீடியோ இணைப்பு)
சங்கக்காராவின் இழப்பு.. சோகத்தில் இலங்கை அணி: சொல்கிறார் மேத்யூஸ்
உலக தடகளத்தில் ஆதிக்கம்: மீண்டும் தங்கம் வென்றார் உசைன் போல்ட் (வீடியோ இணைப்பு)
தொடக்கத்திலே இந்திய அணி திணறல்: பலத்த மழையால் முதல் நாள் ஆட்டம் நிறுத்தம்
12 வயதில் மனைவி.. 54 வயதில் கூட கிரிக்கெட்: பிராட்மேன் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா: கங்குலியின் சாதனையை முறியடித்த டிவில்லியர்ஸ்
[ வியாழக்கிழமை, 27 ஓகஸ்ட் 2015, 05:53.50 மு.ப ] []
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. [மேலும்]
பதக்கத்தை தூக்கி எறிந்த தந்தை.. காதலுக்கு தடைபோட்ட தாய்: யுவராஜின் சோகங்கள்
[ புதன்கிழமை, 26 ஓகஸ்ட் 2015, 01:24.20 பி.ப ] []
இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டாலும், தனக்கெனெ மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் யுவராஜ் சிங். [மேலும்]
‘ரிஸ்க்’ எடுப்பதில் கிளார்க்கின் நிழல் கோஹ்லி: கில்கிறிஸ்ட் புகழாரம்
[ புதன்கிழமை, 26 ஓகஸ்ட் 2015, 10:53.30 மு.ப ] []
விராட் கோஹ்லியின் வழிநடத்தும் திறமை கிளார்க்கின் நிழல் போல இருக்கிறது என்று முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். [மேலும்]
சங்கக்காராவை செல்வாக்குள்ள கிரிக்கெட் வீரர் என்று கூற இயலாது: முத்தையா முரளிதரன்
[ புதன்கிழமை, 26 ஓகஸ்ட் 2015, 08:12.09 மு.ப ] []
சங்கக்காராவை இலங்கையின் செல்வாக்குள்ள கிரிக்கெட் வீரர் என்று கூற இயலாது என்று முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முரளிதரன் கூறியுள்ளார். [மேலும்]
ஆட்டோ ஓட்டிய ஹர்பஜன்! கொழும்பில் ஜாலியாக ஊர்சுற்றிய கோஹ்லி
[ புதன்கிழமை, 26 ஓகஸ்ட் 2015, 07:05.48 மு.ப ] []
இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை இந்திய வீரர்கள் வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர். [மேலும்]