மென்பந்தாட்ட செய்தி
பிரபல முன்னாள் டென்னிஸ் வீரர் மீது பாலியல் வழக்கு
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 07:28.25 பி.ப GMT ]
தென் ஆப்ரிக்காவின் முன்னாள் டென்னிஸ் வீரர் பாப் ஹெவிட் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் பிறந்தவர் டென்னிஸ் வீரர் பாப் ஹெவிட் (வயது 73). கடந்த 1963-1979 இடைப்பட்ட காலத்தில் இரட்டையர் (9), கலப்பு இரட்டையர் (6) என்று மொத்தம் 16 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். திருமணத்துக்குப் பின் தென் ஆப்ரிக்க குடியுரிமை பெற்றார்.

டென்னிஸ் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான “ஹால் ஆப் பேம்” பட்டியலில் இடம் பெற்றவர். இவர் பயிற்சியாளராக இருந்த போது, கடந்த 1981ல் வடக்கு தென் ஆப்ரிக்காவின் சன் சிட்டி என்ற இடத்தில் 16 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

தவிர, 1982ல் கிழக்கு ஜோகனஸ்பர்க்கில், போக்ஸ்பர்க் என்ற இடத்தில் மற்றொரு 16 வயது பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதே இடத்தில் 1994ல் 18 வயது பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார்.

இது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரித்த பொலிசார், ஹெவிட் மீது 2 பாலியல் பலாத்காரம், ஒரு பாலியல் தொல்லை என்று 3 வழக்கு பதிந்தனர். முதலில் இந்த புகார்களை மறுத்த ஹெவிட், நேற்று நடந்த நீதிமன்ற விசாரணையை உடல் நிலையை காரணம் காட்டி புறக்கணித்தார்.

இதற்கான மருத்துவ சான்றிதழ்கள் இவர் சார்பில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதில், ஹெவிட் வயதானவர். சமீபத்தில் முழங்கால், தோள்பட்டையில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.

2010ல் வலிப்பு, 2011ல் மாரடைப்பு வந்துள்ளது என்றும் இவரால் நீண்ட தொலைவு பயணம் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வேலைக்காரப் பெண் போதைக்கு அடிமையானவர்: குற்றச்சாட்டை மறுக்கும் கிரிக்கெட் வீரர் காம்ப்ளி
தூண் போல் கடைசி வரை களத்தில் நின்று சாதனை: கவாஸ்கர், ஷேவாக், டிராவிட் வரிசையில் இணைந்த புஜாரா
இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ணத்தை கைப்பற்றுவோம்: வார்னர் நம்பிக்கை
பந்துவீச்சில் மிரட்டும் இலங்கை: இந்திய அணி தடுமாற்றம் (வீடியோ இணைப்பு)
சதத்துக்கு காரணம் டிராவிட் தான்: மனம் திறக்கும் புஜாரா
அவுஸ்திரேலியாவின் மூன்று அணிகளுக்கும் ஸ்மித் அணித்தலைவரா?
201 ஓட்டங்களில் சுருண்ட இலங்கை:இரண்டாம் இன்னிங்சில் இந்தியா தடுமாற்றம்
பணிப்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த கிரிக்கெட் வீரர்!
சானியா மிர்ஸாவுக்கு "ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது"
சதத்தால் கலக்கிய புஜாரா: தலைவலியில் சிக்கப்போகும் இந்திய தேர்வு குழு
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சதம் விளாசிய புஜாரா.. 9வது வீரராக களமிறங்கி அசத்திய மிஸ்ரா: இந்தியா 292 ஓட்டங்கள் குவிப்பு (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2015, 05:11.06 மு.ப ] []
இலங்கை அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 292 ஓட்டங்கள் எடுத்துள்ளது. [மேலும்]
காதலிக்காக அடி வாங்கிய ரஹானே: ருசிகர தகவல்
[ வெள்ளிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2015, 01:34.23 பி.ப ] []
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரஹானே, தனது கடின உழைப்பால் அணியில் ஒரு நிரந்த இடத்தை தக்க வைத்துள்ளார். [மேலும்]
தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு: சென்னை, ராஜஸ்தானுக்கு பதில் 2 புதிய அணிகள்?
[ வெள்ளிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2015, 12:10.49 பி.ப ] []
கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. [மேலும்]
டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்றது ஏன்? ரவி சாஸ்திரி விளக்கம்
[ வெள்ளிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2015, 11:10.26 மு.ப ] []
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற்றதற்கான காரணத்தை இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். [மேலும்]
கடற்கரை மணலில் தொடங்கிய மலிங்காவின் கிரிக்கெட் பயணம்- சிறப்பு பகிர்வு (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2015, 08:41.24 மு.ப ] []
இலங்கை கிரிக்கெட் அணியின் டி20 தலைவர் லசித் மலிங்காவுக்கு 32வது பிறந்த நாள் இன்று.. [மேலும்]