துடுப்பாட்ட செய்தி
சென்னை அணி மிகவும் பலவீனமாக உள்ளது: அக்ரம்
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 01:49.24 பி.ப GMT ]
ஐ.பி.எல். கிண்ணத்தை 2 முறை வென்ற ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது. 2010, 2011ம் ஆண்டு அந்த அணி ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றியது.

அதோடு இரண்டு முறை 2வது இடத்தை (2008, 2012) பிடித்தது. தற்போது நடைபெற்று வரும் 6வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டத்தில் மும்பை இண்டியன்சிடம் தோற்றது.

2வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இந்த ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பார்க்கும் போது சிறிது பலவீனமாக தெரிகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான வாசிம்அக்ரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், பஞ்சாப் அணி தொடக்க ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியை எளிதில் தோற்கடித்தது. இதனால் அந்த அணி இன்று சென்னை சூப்பர் கிங்சை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.

சென்னை அணி எப்போதுமே வலுவானதாக இருக்கும். தொடக்க ஆட்டத்தில் அந்த அணி கடைசி வரை போராடியே தோற்றது. அதற்கு பரிகாரமாக இன்றைய ஆட்டத்தில் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.

ஆனால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்சை பார்க்கும்போது சிறிது பலவீனமாக இருப்பதாக தெரிகிறது. கடந்த கால துடுப்பாட்ட வரிசையை பார்த்து இதை சொல்கிறேன். முதல் ஆட்டத்தில் தோற்றதை வைத்து சொல்லவில்லை என்றும் அந்த அணிக்குரிய ஆற்றல்திறன் குறைவாக இருப்பது தெரிகிறது எனவும் கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சகலதுறை வீரரான அல்பி மார்கல் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வர தாமதம் ஏற்பட்டதால் முதல் போட்டியில் ஆடவில்லை.

நேற்று அவரும் கிறிஸ் மாரிசும் அணியோடு இணைந்து கொண்டனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் அல்பி மார்கல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கலக்கலாக ஒரு பாலிவுட் பாடல்.. கொஞ்சம் காதல்: அசத்தும் டிவில்லியர்ஸ் (வீடியோ இணைப்பு)
இங்கிலாந்திலும் தொடரும் சங்கக்காராவின் ஆதிக்கம் (வீடியோ இணைப்பு)
ஐபிஎல் போட்டியில் அதிரடி: வெளிவந்த டோனியின் வெற்றி ரகசியம்
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி
ஐபிஎல் 8: ரோஹித் சர்மாவிற்கு ரூ.12 லட்சம் அபராதம்
ஒருநாள் போட்டியில் 350 ஓட்டங்கள் - இங்கிலாந்து வீரர் உலக சாதனை
டெல்லியை பந்தாடிய கொல்கத்தா: கலக்கிய கம்பீர் (வீடியோ இணைப்பு)
சரே பிராந்திய அணியில் சதம் விளாசிய சங்கக்காரா (வீடியோ இணைப்பு)
மைதானத்தில் இளம் கிரிக்கெட் வீரர் மரணம்: சச்சின், கும்ப்ளே இரங்கல்
முதுகெலும்பற்றவர்களே.. கோஹ்லி- அனுஷ்காவுக்கு ஆதரவளித்த பிரீத்தி ஜிந்தா
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: கருணாநந்தசிவம் தனலட்சுமி
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: நீர்கொழும்பு
பிரசுரித்த திகதி: 19 ஏப்ரல் 2015
மரண அறிவித்தல்
பெயர்: அந்தோனிப்பிள்ளை செல்லையா ஜோக்கிம்
பிறந்த இடம்: யாழ். அல்லைப்பிட்டி
வாழ்ந்த இடம்: வவுனியா
பிரசுரித்த திகதி: 17 ஏப்ரல் 2015
மரண அறிவித்தல்
பெயர்: செல்வநாயகம் நவம்
பிறந்த இடம்: யாழ். மாதகல்
வாழ்ந்த இடம்: யாழ். குருநகர், நோர்வே Oslo
பிரசுரித்த திகதி: 14 ஏப்ரல் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தமிம் இக்பால் அபார சதம்! வங்கதேசத்திடம் தொடரை இழந்தது பாகிஸ்தான்
[ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015, 01:51.51 மு.ப ] []
பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது போட்டியிலும் அபார வெற்றி பெற்று வங்கதேசம் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. [மேலும்]
முதல் வெற்றியை ருசித்த மும்பை: போராடி வீழ்ந்த பெங்களூர் (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015, 03:19.41 பி.ப ] []
எட்டாவது ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இண்டியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. [மேலும்]
ரஹானே, வாட்சன் விளாசல்: சென்னையின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது ராஜஸ்தான் (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015, 10:21.43 மு.ப ] []
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. [மேலும்]
சிக்சருக்கு பறந்த பந்து.. அசத்தலாக தடுத்து டெல்லியை காப்பாற்றிய அகர்வால் (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015, 08:31.57 மு.ப ]
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மயாங்க் அகர்வாலின் அசத்தல் களத்தடுப்பால் டெல்லி அணி `திரில்’ வெற்றி பெற்றது. [மேலும்]
இங்கிலாந்து இதற்காக வெட்கப்பட வேண்டும்: சொல்கிறார் சங்கக்காரா (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015, 08:00.07 மு.ப ] []
இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் குமார் சங்கக்காரா, இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சன் மீண்டும் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]