துடுப்பாட்ட செய்தி
வீழ்ந்தது அவுஸ்திரேலியா: இன்னிங்ஸ் மற்றும் 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 06:12.28 மு.ப GMT ]
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.

சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 237 ஓட்டங்களும், இந்தியா 503 ஓட்டங்களும் எடுத்தது.

மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 74 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கோவன் 26 ஓட்டங்களும், வாட்சன் 9 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணியின் வாட்சன் 9 ஓட்டங்களும், அணித்தலைவர் கிளார்க் 16 ஓட்டங்களும் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தனர்.

எதிர்முனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவன் 44 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து களமிறங்கிய வீரர்களும் மளமளவென விக்கெட்டை பறிகொடுக்க அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் இந்திய அணி அஷ்வின் 5 விக்கெட்டும், ரவிந்திர ஜடேஜா 3 விக்கெட்டும் கைப்பற்றினர். இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வீரர்களுடன் காதலியர் போனால் என்ன தப்பு? சொல்கிறார் டிராவிட்
இந்தியா இமாலய வெற்றி: 15-0 கோல் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தியது
லாகூர் லயன்ஸை நொறுக்கியது நார்தன் டிஸ்டிரிக்ட்ஸ்
சிம்மன்ஸ், ஹசி மிரட்டல்: சதர்ன் எக்ஸ்பிரஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
புதிய காதலை டிவிட்டரில் ஒப்புக்கொண்ட டோனியின் மனைவி
சயீத் அஜ்மலின் விதிமீறிய பந்துவீச்சு: லட்சங்களை கொட்டும் கிரிக்கெட் வாரியம்
டோனி கற்றுத் தந்த பாடம்: சொல்கிறார் மெக்குல்லம்
நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மும்பை அணி
சம்பியன்ஸ் லீக் அதிவேக அரைசதத்தில் டோனி தான் ’டாப்’ (வீடியோ இணைப்பு)
மேற்கிந்தியத் தீவுகளின் இந்தியப் பயணத்தில் மாற்றம்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: அன்னலட்சுமி சீவரத்தினம்
பிறந்த இடம்: யாழ். கோண்டாவில் வடக்கு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Deuil-la-Barre
பிரசுரித்த திகதி: 6 செப்ரெம்பர் 2014
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பெயர்: ஆரணி ஆறுமுகதாசன்
பிறந்த இடம்: டென்மார்க்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: திருராசா நடராசா
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: சுவிஸ் Thun
பிரசுரித்த திகதி: 13 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: முத்துக்குமாரு ஸ்ரீதவராசா
பிறந்த இடம்: யாழ். அராலி வடக்கு
வாழ்ந்த இடம்: லண்டன் Welling
பிரசுரித்த திகதி: 12 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: வைரவி மார்க்கண்டு
பிறந்த இடம்: யாழ். சுதுமலை
வாழ்ந்த இடம்: யாழ். பலாலி
பிரசுரித்த திகதி: 8 செப்ரெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
என்னை காயப்படுத்தும் விமர்சனம்: சொல்கிறார் இர்பான் பதான்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 01:56.36 பி.ப ] []
இர்பான் பதான் முதல் தரப்போட்டிகளை விடுத்து டி20 போட்டிகளுக்கு தான் முக்கியதுவம் கொடுக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. [மேலும்]
வீராங்கனைகளை நிர்வாண படமெடுத்த பயிற்சியாளர்: அதிர்ச்சி தகவல்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 01:01.33 பி.ப ] []
நெதர்லாந்து நாட்டில் ரகசிய கமெரா மூலம் ஹொக்கி வீராங்கனைகளை நிர்வாண படமெடுத்த பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
தெலுங்கானாவுக்கு சமர்ப்பணம்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 11:42.38 மு.ப ] []
கடந்த வாரத்தில் நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகள் உங்களுக்காக, [மேலும்]
டில்ஷான், மலிங்கா ’அவுட்’: நெருக்கடியில் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணி
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 11:21.59 மு.ப ] []
சம்பியன் லீக் கிரிக்கெட் தொடரில் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியின் இலங்கை வீரர் டில்ஷானுக்கு பதிலாக சம்பத் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். [மேலும்]
சயீத் அஜ்மலுக்கு தடை விதிக்க காரணம் யார்? (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 08:02.21 மு.ப ] []
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பந்து வீச தடை விதித்ததற்கு அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனின் தொடர் புகார்களே காரணம் என்று கூறப்படுகிறது. [மேலும்]