துடுப்பாட்ட செய்தி
8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 05:14.48 மு.ப GMT ]
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.,) 10வது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் மும்பை மற்றும் கட்டாக் நகரில் நடைபெற்று வருகின்றன.

நேற்று, மும்பையில் நடந்த “சூப்பர்-6” சுற்று போட்டியில் “நடப்பு சாம்பியன்” இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு லிசா ஸ்தலிகர் 41 ஓட்டங்களும், சாரா காய்டி 44 ஓட்டங்களும் எடுத்து கைகொடுத்தனர். அவுஸ்திரேலிய அணி 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தது.

சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 145 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

லிடியா கிரீன்வே 49 ஓட்டங்களும், லாரா மார்ஷ் 22 ஓட்டங்களும் எடுத்தனர். பந்து வீச்சில் அவுஸ்திரேலியா சார்பில் ஹோலி பெர்லிங் 3 விக்கெட் கைப்பற்றினார்.

மும்பையில் நடந்த மற்றொரு “சூப்பர்-6” போட்டியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் திலானி சுரங்கிகா 34 ஓட்டங்களும், தீபிகா ரசாங்கிகா 20 ஓட்டங்களும் மட்டுமே எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொதப்ப இலங்கை அணி 42 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

எளிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 23 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 108 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரான்சஸ் மெக்கே 39 ஓட்டங்களும், அணித்தலைவி சுஜி பேட்ஸ் 37 ஓட்டங்களும், சோபி டேவின் 29 ஓட்டங்களும் எடுத்தனர்.

கட்டாக் நகரில் நடந்த “சூப்பர்-6” போட்டியில் தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 230 ஓட்டங்கள் எடுத்தது. திரிஷா ஷெட்டி 45 ஓட்டங்களும், ஷெல்டா பிரிட்ஸ் 44 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்பு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஸ்டபானி டெய்லர் 75 ஓட்டங்களும், கைகா நைட் 46 ஓட்டங்களும் எடுத்து நம்பிக்கை அளிக்க 45.3 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 234 ஓட்டங்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கோஹ்லியின் சொதப்பலுக்கு அனுஷ்காவை திட்டித் தீர்ப்பதா? கங்குலி ஆதரவு
டோனியை கண்கலங்க வைத்த தோல்வி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
இந்தியாவின் வெற்றியை தட்டிப் பறித்தது எது தெரியுமா? சொல்கிறார் சச்சின்
இந்தியாவை விரட்டியடித்த அவுஸ்திரேலியா.. உலகக்கிண்ணத்தில் தொடரும் சாதனைகள்
தோல்வியிலும் சாதனை படைத்த டோனி
மகேந்திர சிங் டோனி.. நல்லா தெரியுற மாதிரி அடிங்க: பட்டையை கிளப்பும் ரசிகர்களின் கிண்டல்
நெருப்பை கக்கும் மிட்செல் ஜான்சன்.. இந்தியாவின் தோல்வியை கொண்டாடும் பாகிஸ்தான்
கோட்டை விட்ட கோஹ்லி.. அனுஷ்காவை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
தகர்க்க நினைத்த இமாலய இலக்கு.. அவுஸ்திரேலியாவுக்கு இருந்த நெருக்கடி: மனம் திறந்த டோனி
அவுஸ்திரேலியாவுடன் தோல்வி.. டோனி, கோஹ்லி வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு!
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சதாரூபலட்சுமி பசுபதிப்பிள்ளை
பிறந்த இடம்: யாழ். சரவணை
வாழ்ந்த இடம்: கொழும்பு
பிரசுரித்த திகதி: 23 மார்ச் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அவுஸ்திரேலியாவை நொறுக்காவிட்டால் விளையாடியதில் அர்த்தமில்லை: கொந்தளிக்கும் கோஹ்லி
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 12:21.01 பி.ப ] []
அவுஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தாவிட்டால் இவ்வளவு காலம் அவுஸ்திரேலியாவில் விளையாடியதில் அர்த்தமில்லை என்று விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். [மேலும்]
தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சகோதரி திருமணத்திற்கு போக முடியாமல் தவிக்கும் எலியாட்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 11:07.57 மு.ப ] []
உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றதால், தனது சகோதரியின் திருமணத்திற்கு எலியாட் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. [மேலும்]
கோஹ்லியை உற்சாகப்படுத்த சிட்னி பறந்த அனுஷ்கா.. புலம்பித் தீர்க்கும் ரசிகர்கள்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 09:11.14 மு.ப ] []
உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் களமிறங்கும் இந்திய வீரர் விராட் கோஹ்லியை உற்சாகப்படுத்த அவரது காதலி அனுஷ்கா சர்மா சிட்னி சென்றுள்ளார். [மேலும்]
இந்திய வீரர்களை சீண்டிப் பார்ப்பேன்: மிரட்டல் விட்ட ஜான்சன்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 08:30.00 மு.ப ] []
உலகக்கிண்ண அரையிறுதியில் இந்திய வீரர்களை சீண்டி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவேன் என்று அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் மிரட்டல் விடுத்துள்ளார். [மேலும்]
பெருமையை நிலைநாட்டுமா இந்தியா?
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 07:11.04 மு.ப ]
கடந்த 23 ஆண்டுகளாக ஆசிய அணிகள் தொடர்ந்து நடத்தி வரும் சாதனையை இந்தாண்டு இந்தியா நிறைவேற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. [மேலும்]