துடுப்பாட்ட செய்தி
இலங்கை அணி அறிவிப்பு: சங்கக்காரா உட்பட மூத்த வீரர்கள் இடம் பெற்றனர்
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 05:59.12 மு.ப GMT ]
சம்பள ஒப்பந்த பிரச்னை முடிந்த நிலையில் வங்கதேசத்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் வழக்கமான இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) நடத்தும் தொடர்களின் வருமானத்தில் இருந்து தங்களுக்கு 25 சதவிகிதம் அளிக்க வேண்டும் என்று இலங்கை வீரர்கள் வலியுறுத்தினர்.

இதனை இலங்கை கிரிக்கெட் வாரியம் (எஸ்.எல்.சி) ஏற்க மறுத்தது. வீரர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருக்க வங்கதேச தொடரில் புதிய வீரர்களை தெரிவு செய்யும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தெரிவுக்குழு தலைவரும் இலங்கையின் முன்னாள் வீரருமான ஜெயசூர்யா திடீரென இப்பிரச்னையில் தலையிட்டார். வீரர்களுடன் சமரச முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து எஸ்.எல்.சி., மற்றும் வீரர்கள் இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

பிரச்னை முடிந்ததை அடுத்து நேற்று இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. காலேயில் வரும் 8ம் திகதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் மேத்யூஸ் அணித்தலைவராக நீடிக்கிறார்.

விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரரும் சண்டிமால் துணை அணித்தலைவராக தெரிவு பெற்றார். டில்ஷன் காயத்தில் இருந்து மீண்ட சங்ககரா, திரிமான்னே, கருணாரத்னே, ஷமிந்தா எரங்கா, குஷால் ஜெனித், ஜீவன் மெண்டிஸ், அஜந்தா மெண்டிஸ், விதாங்கே, குலசேகரா, வெலகேதிரா, சுரங்கா லக்மல், ஹேரத், கவுஷலும் இடம் பெற்றனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
இளம் வீரர்களுக்கு திறமையான பயிற்சியாளர்கள் தேவை: லட்சுமண் கோரிக்கை
ஒருநாள் போட்டியில் 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார் மஹேல
சீனாவின் கால்பந்து தூதரானார் டேவிட் பெக்காம்!
பொலிசார் சித்ரவதை: புக்கிகள் கதறல்
கடவுளின் கருணையால் வெள்ளத்திலிருந்து மீண்டேன்: ஹர்பஜன் உருக்கம்
அனுமதியின்றி மாரடோனாவின் படம்: சீன நிறுவனத்திற்கு அபராதம்
சாம்பியன் பட்டம் பெடரர் வசம்
மோசமான துடுப்பாட்டமே தோல்விக்கு காரணம்: மெக்கல்லம்
மேற்கிந்திய தீவுக்கான முத்தரப்பு தொடர்: இந்திய அணி அறிவிப்பு - சேவாக், காம்பிர் நீக்கம்
எமது அணி வீரர்கள் களத்தடுப்பில் சிறப்பாக செயற்பட்டனர்: குக்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பாகிஸ்தான் அணி மீது வாசிம் அக்ரம், ரமீஷ் ராஜா கடும் தாக்கு
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 09:46.18 மு.ப ]
சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் மோதிய மூன்று ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி தோற்று பரிதாபமாக வெளியேறியது. [மேலும்]
சிறப்பாக பந்து வீசினார்: புவனேஷ் குமாருக்கு டோனி பாராட்டு
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 07:05.35 மு.ப ]
பாகிஸ்தானுக்கெதிரான ஆட்டத்தில் புவனேஷ்வர் குமார் சரியான இடத்தில் துல்லியமாக பந்துவீசியதாக இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார். [மேலும்]
ஆடுகளத்தில் அச்சப்படும் பாகிஸ்தான் வீரர்கள்: ஷோயப் அக்தர் கவலை
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 02:14.42 மு.ப ]
பாகிஸ்தான் வீரர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார். [மேலும்]
அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 08:05.19 பி.ப ] []
சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. [மேலும்]
பிராவோ புலம்பல்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 07:42.30 பி.ப ]
ஒரு பந்தில் அரையிறுதிக்கான வாய்ப்பை கோட்டைவிட்டது வருத்தம் அளிக்கிறது என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் டுவைன் பிராவோ தெரிவித்தார். [மேலும்]