துடுப்பாட்ட செய்தி
ஐ.பி.எல்: சூப்பர் ஓவரில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் வெற்றி
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 08:06.50 பி.ப GMT ]
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் தொடரின் 7வது லீக் போட்டியில் சங்கக்காரா தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, கோஹ்லி தலைமையிலான பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது.

ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன் மூலம் 20 ஓவர்களில் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்து 131 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணி சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவித்தது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டம் இறுதியில் சமன் ஆனதால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் ஐதராபாத் அணியிலிருந்து ஒயிட் மற்றும் பெரேரா களம் இறங்கினர். பெங்களூர் அணியில் வினய் குமார் பந்து வீசினார். இருவரும் சிறப்பாக விளையாடி ஒரு ஓவரில்  20 ஓட்டங்கள் குவித்தனர்.

பின்னர் 21 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணியில் இருந்து கெய்ல் மற்றும் கோஹ்லி களம் இறங்கினார்கள்.

ஸ்டெயினின் அபாரமான பந்து வீச்சால் பெங்களூர் அணியினரால் ஓட்டங்களை குவிக்க முடியவில்லை. கெய்ல் 10 ஓட்டங்களும், கோஹ்லி 5 ஓட்டங்களும் மட்டுமே எடுத்தனர்.

இதனால் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ராஜபக்சே என்னிடம் ஆதரவு கேட்டாரா? உண்மையை கூறும் சங்ககரா
5 விக்கெட் இழப்புக்கு 259 ஓட்டங்கள் குவித்த அவுஸ்திரேலியா
டோனிக்கு வார்த்தைகளில் கவனம் தேவை: சொல்கிறார் கவாஸ்கர்
எனக்கு கிடைத்த கவுரவம்: பெருமிதத்தில் கங்குலி
இந்தியாவுக்கு வெற்றி என்றால் அது மெல்போர்னில் தான்: பொண்டிங் ஆரூடம்
10 ஆண்டுகளில் எவ்வளவோ பார்த்துவிட்டேன்: டோனியின் "கூல்" பதில்
மெக்கல்லம் அதிரடி சதம்! வலுவான நிலையில் நியூசிலாந்து
வார்த்தைகளால் சீண்டிக் கொள்ளும் இந்திய வீரர்கள்: ஸ்டீவன் சுமித்
மறக்க முடியுமா: மிரட்டிய அப்ரிடி- கலங்க வைத்த மலிங்கா (வீடியோ இணைப்பு)
மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணிக்கு வெற்றி காத்திருக்கிறது: பொண்டிங்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: வேலுப்பிள்ளை தம்பித்துரை
பிறந்த இடம்: யாழ். கட்டுவன்
வாழ்ந்த இடம்: லண்டன் Lewisham
பிரசுரித்த திகதி: 20 டிசெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
என்றும் நினைவில்: அவுஸ்திரேலியாவிடம் அநாகரீமாக நடந்து கொண்ட தவான்
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 12:50.43 பி.ப ] []
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆடுகளத்தில் சந்தித்த சில மறக்க நிகழ்வுகள் புகைப்படங்களாக கொடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
கழற்றிவிடப்பட்டது வேதனையளிக்கிறது: குமுறும் அலாஸ்டர் குக்
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 10:56.40 மு.ப ] []
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் பதவி பறிக்கப்பட்டு, உலகக்கிண்ண அணியிலும் இடம் கிடைக்காததால் அலாஸ்டர் குக் வேதனையில் இருக்கிறார். [மேலும்]
சீண்டிய ரசிகர்: ஆடைமாற்றும் அறையில் வைத்து வெளுத்து வாங்கிய யூசுப் பதான்
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 06:35.22 மு.ப ] []
இந்திய அணியின் சகலதுறை வீரரான யூசுப் பதான், தகாத வார்த்தையால் சீண்டிய ரசிகர் ஒருவரை தாக்கியுள்ளார். [மேலும்]
அதிகமாக வாய்ப்பேசிய ரோஹித் சர்மாவை பார்த்து சிரித்தேன்: மிட்செல் ஜான்சன்
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 05:54.39 மு.ப ] []
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் தான் களமிறங்கிய போது ரோஹித் சர்மாவின் அதிகப்படியான வாய் வார்த்தையால் ஒரு கட்டத்தில் சிரித்து விட்டதாக மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார். [மேலும்]
அப்ரிடி உட்பட 5 வீரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- பாகிஸ்தான் எச்சரிக்கை
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 03:32.07 மு.ப ] []
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் விளம்பரம் ஒன்றில் நடித்த 5 வீரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]