துடுப்பாட்ட செய்தி
5 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அசத்தல் வெற்றி: பொல்லார்டின் சதம் வீண்
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 07:27.35 மு.ப GMT ]
மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியா சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் மூன்று போட்டியில் வெற்றி கண்ட அவுஸ்திரேலியா அணி ஏற்கனவே தொடரை வென்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்களான பவல் 9 ஓட்டங்களும், ஜான்சன் சார்லஸ் ஓட்டங்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய முதல்வரிசை துடுப்பாட்ட வீரர்களும் சொதப்ப மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுக்கு 55 ஓட்டங்கள் மட்டும் எடுத்து திணறியது. விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும், தனிநபராக போராடிய பொல்லார்டு ஒருநாள் அரங்கில் தனது 3வது சதத்தை அடித்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணி 49.4 ஓவரில் 220 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பொல்லார்டு 109 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலியா சார்பில் மிட்சல் ஜான்சன், பென் கட்டிங் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய அவுஸ்திரேலிய அணி 44.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 221 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

வாட்சன் 76 ஓட்டங்களும், ஆதம் வோக்ஸ் 28 ஓட்டங்களும், அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் 37 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி 4-0 என்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

ஆட்ட நாயகன் விருது மேற்கிந்திய தீவுகளின் பொல்லார்டுக்கு வழங்கப்பட்டது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேன் நகரில் நாளை நடைபெறவுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சச்சின் டெண்டுல்கரின் 12 வருட சாதனையை முறியடித்தார் அவுஸ்திரேலிய வீரர் ஆடம் வோக்ஸ்
ஜூனியர் உலகக்கிண்ணம்: வங்கதேசத்திடம் அடி வாங்கி 3வது இடத்தையும் இழந்த இலங்கை (வீடியோ இணைப்பு)
ஓய்வு அறிவித்தார் ஷிகர் தவான்
இந்திய அணியிடம் படுதோல்வியடைந்தது ஏன்? சந்திமால் விளக்கம்
யுவராஜ் சிங்கை முன்கூட்டியே களமிறக்க முடியாது: டோனி
ரூட் சதம் வீண்: பரபரப்பான ஆட்டத்தில் 1 விக்கெட்டால் இங்கிலாந்தை வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா
மின்னல் வேகப்பந்தால் இலங்கை வீரரின் ஸ்டெம்பை நொறுக்கிய பும்ரா! (வீடியோ இணைப்பு)
கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் கலக்கப்போகும் சங்கக்காரா, டிவில்லியர்ஸ்
அடுத்தடுத்து வீழ்ந்த பாண்டியா, ரெய்னா, யுவராஜ்: "ஹாட்ரிக்" சாதனை படைத்த திசர பெரேரா (வீடியோ இணைப்பு)
2வது டி20 போட்டி: இலங்கையை பந்தாடிய இந்தியா - 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி (வீடியோ இணைப்பு)
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: ரேணுகா தவயோகராஜன்
பிறந்த இடம்: யாழ். சங்கரத்தை
வாழ்ந்த இடம்: லண்டன் East Ham
பிரசுரித்த திகதி: 12 பெப்ரவரி 2016
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வங்கதேசத்தை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதல்
[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 12:40.59 பி.ப ] []
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் வங்கதேசத்தை 3 விக்கெட்டுகளால் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி. [மேலும்]
தேசிய கீதம் ஒலிக்கும் போது செய்யும் காரியமா இது? வெடிக்கும் சர்ச்சை (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 10:52.54 மு.ப ] []
அவுஸ்திரேலிய தேசிய கீதம் ஒலிக்கும் போது அந்நாட்டு வீரர் உஸ்மான் காவாஜா அநாகரீகமாக நடந்து கொண்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடருவேன்: மிரட்டும் டோனி
[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 09:07.14 மு.ப ] []
இந்திய அணித்தலைவர் டோனி தான் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக கூறியுள்ளார். [மேலும்]
வரலாற்றிலே முதன்முறையாக ரூ.1600 கோடிக்கு இழப்பை சந்திக்கப் போகும் பிசிசிஐ!
[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 08:42.11 மு.ப ]
லோதா கமிட்டியின் பரிந்துரைகளால் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.1600 கோடி அளவுக்கு வருவாய் இழப்பை சந்திக்க போகிறது. [மேலும்]
’நொறுங்கிய இதயம்’: கோஹ்லி- அனுஷ்கா பிரிவுக்கு காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 07:30.27 மு.ப ] []
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி- பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இடையிலான 2 வருட காதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. [மேலும்]