ஏனைய விளையாட்டு செய்தி
பட்டங்கள் பறிக்கப்பட்டாலும் ஆர்ம்ஸ்டாங் தான் எனது நாயகன்: யுவராஜ் சிங்
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 10:40.10 மு.ப GMT ]
இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான யுவராஜ்சிங் புற்றுநோயிலிருந்து குணமடைந்து அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றபோது யுவராஜ்சிங் அமெரிக்க சைக்கிள் பந்தய வீரர் லான்ஸ் ஆர்ம்ஸ்டாங் போல் தான் மீண்டும் வந்து சிறப்பாக ஆடுவேன் என்று கூறி இருந்தார்.

புற்றுநோயில் இருந்து குணமடைந்த ஆர்ம்ஸ்டாங் டூர் டிபிரான்ஸ் சைக்கிள் சாம்பியன் பட்டத்தை 7 முறை வென்றார்.

இந்த நிலையில் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக ஆர்ம்ஸ்டராங்குக்கு தடை விதிக்கப்பட்டது. சாம்பியன் பட்டங்களையும் இழந்தார்.

இந்நிலையில் ஆர்ம்ஸ்டாங் தான் எனது நாயகனாக தொடர்ந்து இருக்கிறார் என்று யுவராஜ்சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ஆர்ம்ஸ்டாங் பற்றிய செய்தி படித்தேன். அதைபற்றி நான் கவலைப்படவில்லை. புற்று நோயில் இருந்து குணமடைந்து சாம்பியன் பட்டம் பெற்றது மகத்தானது.

அவர் ஒரு லட்சிய மனிதர். வாழ்க்கையின் உண்மையான நாயகன் அவர் தான்.

எனக்கு அவர் எப்போதுமே நாயகனாகத் தான் உள்ளார் என்றும் அவருக்கு நான் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தகவல் அனுப்பினேன் எனவும் கூறியுள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
நட்சத்திர கிரிக்கெட் இறுதிப்போட்டி: சென்னை ரைனோஸ் அணியை வீழ்த்தியது தெலுங்கு வாரியர்ஸ் (வீடியோ இணைப்பு)
கொலைக்களமாக மாறி வரும் மைதானம்! பவுன்சர் பந்து தாக்கி மற்றொரு வீரர் மரணம்
அவுஸ்திரேலிய ஓபன்: சாதனை படைத்த செரீனா…. பட்டம் வென்ற பயஸ்-ஹிங்கிஸ் ஜோடி
அப்ரிடியின் அதிரடி வீண்: பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து
கங்குலி, டிராவிட் கனவை தகர்த்த பொண்டிங்: உலகக்கிண்ணத்தை தவறவிட்ட ஜாம்பவான்கள்
சென்னை அணியை வாங்குவதா? நடிகை திரிஷாவின் வருங்கால கணவருக்கு மிரட்டல்
விரைவில் அப்பாவாக போகும் டோனி
உலகக்கிண்ணப் போட்டிக்கு தயாராகாத பாகிஸ்தான்
மேக்ஸ்வெல், ஜான்சன் அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்தி கிண்ணம் வென்றது அவுஸ்திரேலியா
கர்நாடகாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த சென்னை அணி (வீடியோ இணைப்பு)
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலி
பெயர்: இராசாத்தி இளையதம்பி
பிறந்த இடம்: யாழ். அச்சுவேலி பத்தமேனி
வாழ்ந்த இடம்: யாழ். அச்சுவேலி பத்தமேனி
பிரசுரித்த திகதி: 31 சனவரி 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: கோடீஸ்வரன் பத்மநாதன்
பிறந்த இடம்: அனலைதீவு பூநகரி நல்லூர்
வாழ்ந்த இடம்: சுவிஸ், கனடா
பிரசுரித்த திகதி: 27 சனவரி 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஜடேஜா ஏன் அப்படி செய்தார்? காட்டத்தில் கங்குலி
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 08:38.28 மு.ப ] []
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஜடேஜாவின் மோசமான ஷாட்டை முன்னாள் அணித்தலைவர் கங்குலி விமர்சனப்படுத்தியுள்ளார். [மேலும்]
சொபிக்காத கோஹ்லி: டோனியை பதம் பார்த்த பவுன்சர்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 07:37.36 மு.ப ] []
முத்தரப்பு ஒருநாள் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி துடுப்பாட்டத்தில் சொதப்பி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. [மேலும்]
இந்திய அணியின் சொதப்பல் ஆட்டத்திற்கு காரணம் என்ன? சொல்கிறார் டோனி
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 06:17.30 மு.ப ] []
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணியின் மோசமாக செயல்பாட்டுக்கு இந்திய வீரர்களின் காயம் மற்றும் ஆயத்தமின்மையை அணித்தலைவர் டோனி காரணங்களாக கூறியுள்ளார். [மேலும்]
உத்வேகம் அளித்த கோஹ்லி: முச்சதம் விளாசித் தள்ளிய லோகேஷ் ராகுல்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 05:23.27 மு.ப ] []
ரஞ்சிக் கிண்ணப் போட்டியில் கர்நாடகா அணியின் லோகேஷ் ராகுல் முச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். [மேலும்]
சூதாட்ட பெண்ணுடன் தொடர்பு: ரெய்னாவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் கிடுக்கிப் பிடி
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 01:36.15 பி.ப ] []
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா, பெண் ஒருவருடன் இருந்தது தொடர்பான விசாரணைக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்]