துடுப்பாட்ட செய்தி
வெற்றியுடன் தொடங்குமா நடப்பு சாம்பியன் கொல்கத்தா: டெல்லியுடன் இன்று மோதல்
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 06:40.12 மு.ப GMT ]
ஐ.பி.எல்., தொடரின் இன்றைய முதலாவது லீக் போட்டியில் “நடப்பு சாம்பியன்” கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இன்று தொடங்கும் ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் கொல்கத்தாவில் நடக்கும் லீக் போட்டியில் கம்பீரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஜெயவர்த்தன தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா அணியை பொறுத்தவரை அணித்தலைவர் கம்பீரை தான் அதிகம் சார்ந்துள்ளது. சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயில் இருந்து மீண்டுள்ள இவர், சாதித்துக்ககாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

அதிரடி வீரர் பிரண்டன் மெக்கலம் காயம் காரணமாக முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. தவிர, சகலதுறை வீரர் ஷாகிப் அல் ஹசனும் இன்னும் கொல்கத்தா அணியில் இணையவில்லை.

இதனால் நடுவரிசையில் அனுபவ காலிசுக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. இளம் வீரர்களான சுக்லா, பிஸ்லா, தேப்ரதா தாஸ் ஆகியோர் கைகொடுக்கலாம். கடந்த முறை நடந்த சென்னை அணிக்கெதிரான இறுதியாக அதிரடியாக விளையாடி கிண்ணம் பெற்று தந்த பிஸ்லா மீண்டும் அசத்த காத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு சுனில் நரைனின் சுழற்பந்துவீச்சு முக்கிய காரணம். இவருடன் இலங்கையின் சேனநாயகே கைகோர்க்கும் பட்சத்தில் டெல்லி அணிக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.

பந்துவீச்சு ஆலோசகராக இருந்த அக்ரம் விலகியதை தொடர்ந்து பிரட் லீக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. ஜேம்ஸ் பட்டின்சன், தமிழக வீரர் பாலாஜி ஆகியோர் வேகத்தில் அசத்தலாம்.

டெல்லி அணியில் ஷேவாக் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் தொடக்க வீரர் வார்னர் தனது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.

அணித்தலைவர் ஜெயவர்த்ன நடுவரிசையில் நம்பிக்கை அளிக்கிறார். தவிர, இளம் உன்முக்த் சந்த் நல்ல “பார்மில்” உள்ளது ஆறுதலான விடயம்.

பந்துவீச்சை பொறுத்தவரையில் சமீபத்தில் காயத்தில் இருந்து மீண்ட உமேஷ் யாதவ், இர்பான் பதான் ஆகியோர் நம்பிகை தரலாம். இவர்களுடன் மேற்கிந்திய தீவுகள் வீரர் ஆன்ட்ரூ ரசல் கைகோர்க்கும் பட்சத்தில் கொல்கத்தா அணிக்கு தலைவலி ஏற்படலாம்.

டெல்லி அணிக்கு மற்றொரு பின்னடைவாக இன்றைய கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் முதுகு பிடிப்பு காரணமாக ஷேவாக் பங்கேற்க மாட்டார். ஏற்கனவே காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் விலகியுள்ளார். தவிர, தென் ஆப்ரிக்காவின் மார்னே மார்கலும் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார்.

இதுவரை மோதியுள்ள 9 ஐ.பி.எல்., போட்டிகளில், 5ல் கொல்கத்தா அணியும், 4ல் டெல்லி அணியும் வென்றுள்ளன. கடைசியாக இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் (மே 22, 2012) கொல்கத்தா அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தவிர, ஐ.பி.எல்., தொடரில் டெல்லி அணி இதுவரை மொத்தம் 75 போட்டிகளில் பங்கேற்று 39ல் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 72 போட்டிகளில் பங்கேற்று 36ல் வென்றுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
மகேந்திர சிங் டோனி.. நல்லா தெரியுற மாதிரி அடிங்க: பட்டையை கிளப்பும் ரசிகர்களின் கிண்டல்
நெருப்பை கக்கும் மிட்செல் ஜான்சன்.. இந்தியாவின் தோல்வியை கொண்டாடும் பாகிஸ்தான்
கோட்டை விட்ட கோஹ்லி.. அனுஷ்காவை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
தகர்க்க நினைத்த இமாலய இலக்கு.. அவுஸ்திரேலியாவுக்கு இருந்த நெருக்கடி: மனம் திறந்த டோனி
அவுஸ்திரேலியாவுடன் தோல்வி.. டோனி, கோஹ்லி வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு!
போராடி வீழ்ந்தது இந்தியா.. 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா (வீடியோ இணைப்பு)
மிரட்டும் அவுஸ்திரேலியா.. விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் இந்தியா
இந்தியாவுக்கு ஆப்பு வைத்த இங்கிலாந்து நடுவர் ரிச்சர்ட்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
டோனியின் சொல்பேச்சை கேட்காமல் அடம்பிடித்த ஜடேஜா.. ரசிகர்களை கடுப்பேற்றிய 'அம்பயர் கால்'
ரெய்னாவின் வருங்கால மனைவி கிராமத்திற்கு விடுமுறை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சதாரூபலட்சுமி பசுபதிப்பிள்ளை
பிறந்த இடம்: யாழ். சரவணை
வாழ்ந்த இடம்: கொழும்பு
பிரசுரித்த திகதி: 23 மார்ச் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அவுஸ்திரேலியாவை நொறுக்காவிட்டால் விளையாடியதில் அர்த்தமில்லை: கொந்தளிக்கும் கோஹ்லி
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 12:21.01 பி.ப ] []
அவுஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தாவிட்டால் இவ்வளவு காலம் அவுஸ்திரேலியாவில் விளையாடியதில் அர்த்தமில்லை என்று விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். [மேலும்]
தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சகோதரி திருமணத்திற்கு போக முடியாமல் தவிக்கும் எலியாட்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 11:07.57 மு.ப ] []
உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றதால், தனது சகோதரியின் திருமணத்திற்கு எலியாட் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. [மேலும்]
கோஹ்லியை உற்சாகப்படுத்த சிட்னி பறந்த அனுஷ்கா.. புலம்பித் தீர்க்கும் ரசிகர்கள்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 09:11.14 மு.ப ] []
உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் களமிறங்கும் இந்திய வீரர் விராட் கோஹ்லியை உற்சாகப்படுத்த அவரது காதலி அனுஷ்கா சர்மா சிட்னி சென்றுள்ளார். [மேலும்]
இந்திய வீரர்களை சீண்டிப் பார்ப்பேன்: மிரட்டல் விட்ட ஜான்சன்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 08:30.00 மு.ப ] []
உலகக்கிண்ண அரையிறுதியில் இந்திய வீரர்களை சீண்டி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவேன் என்று அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் மிரட்டல் விடுத்துள்ளார். [மேலும்]
பெருமையை நிலைநாட்டுமா இந்தியா?
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 07:11.04 மு.ப ]
கடந்த 23 ஆண்டுகளாக ஆசிய அணிகள் தொடர்ந்து நடத்தி வரும் சாதனையை இந்தாண்டு இந்தியா நிறைவேற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. [மேலும்]